Monday, December 14, 2009

எனது முடிவு..


ஒரு சிறிய ஆரம்பம்...
எனது
முடிவினை எழுதிவிட்டது...
ஆரம்பம் காதலில்...
முடிவு எந்தன் வாழ்வினில்...

Thursday, October 29, 2009

முதுமை...

முதுமை...

உன்னை அறிந்த நீ

மற்றவரை திருத்தும் நேரம்...

Tuesday, October 27, 2009

உலக நியதி....

நீ இந்த உலகில் வாழ வேண்டுமென்றால்...
ஏமாற்ற கற்றுக்கொள்....
இல்லையெனில்...
ஏமாறக் கற்றுக்கொள்....

உழைப்பு....

உனக்கொரு முகவரி வேண்டுமெனில்...
உன் வழியில் செல்...

உலக நாயகன்....


உன்னை வெல்ல எவனும் இல்லை...
உன்னைப்போல் ஒருவன் இனிமேல் இல்லை....
உங்கள் வழியில்... எங்கள் விழிகள்....

உண்மை....

காதல் ....
கண்ணீரின் இருப்பிடம்.....
மௌனங்களின் அலறல்கள்.....
யுத்தங்களின் ஆரம்பம்....
இருப்பினும்....
காதல் அழகானது.....

Sunday, October 11, 2009


கடவுள்...

இல்லை என்று சொல்லி...

இருப்பவர் சிலர்...

இருக்கிறான் என்று சொல்லி ...

வாழ்பவர் சிலர்...

நான்தான் என்று கூறி...

பிழைப்பவர் பலர்...

இதில் யார் கூறுவது உண்மை...???

என்ன நடந்தது....???

நான் அவளை சந்தித்த பொது

நிலவு பகலில் தோன்ற...

அலைகள்அமைதி பாட...

புயலாய் தென்றல் வீச...

கவிதை நூறு எழும்ப....

இவை எதுவும் நடக்கவில்லை....

நான் அவளையும்...அவள் என்னையும் கடந்து செல்ல...

காதல் கண்களுக்குள் பாய்ந்தது...

Saturday, October 10, 2009

கற்பனை...


கற்பனை....

பல கண்டுபிடிகளுக்கும் ...
பல அழிவுகளுக்கும் ...
மூல காரணம்....

காதல்...

காதல் இருக்கும் இடத்தில் எல்லாம்

அதிசயம் உண்டாகும்...

ஆம் நம் மனித இனம் உண்டாக

இருந்த புனித சூத்திரம்...

காதலும் அமைதியும்...



இரு வேறு துருவங்கள்...

அமைதியும் காதலும்...

ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள

பல யுகங்கள் ஆகும்...

இறைவனின் பரிசு..


தாய்...

எனக்கென இறைவன் கண்டுபுடித்த
அரிய பொக்கிஷம் ...

குழந்தை....

அனைத்தும் தெரிந்து கொள்ள துடிக்கும்
அறியாத மனம்....

Thursday, October 08, 2009


சரித்திரம் நீ படிக்க வேண்டாம்...
உன் சரித்திரத்தை நாங்கள் படிக்க ஆசைப்படும்பொழுது...
உங்கள் வழி எங்களுக்கு சுலபம் அல்ல ...
ஆனால் நீங்கள் காட்டிய வழி...
எங்களுக்கு போதும்...

Tuesday, October 06, 2009

உறக்கம்...
அவளை காண...
அவளுடன் பேச...
என்னை அறியாமலே ....
எனக்கு தெரியாமலே...
இறைவன் எனக்கு தந்த வரம்....
உறக்கத்தை கலைத்து நிலைக்கு வந்தால் ...கண்டது கனவு என்று தெரிந்துகூட அதையே கேட்கிறது மனது...

ஏன் பிறந்தேன் என்று தெரிந்து கொள்ள பிறந்தேனா?
இல்லை உன் வாழ்கை இதுதான் என்று தெரிந்து கொண்டு பிறந்தேனா???
பதில்....
தொடர்புள்ளிகளாகவே இருக்கட்டும்...


காதலை சுமப்பவனின் வலி...
உயிர் நாடி அவளின் சிணுங்கலாய் இருக்கும்...
உயிர் காக்கும் இதய துடிப்பு ...
அவளின் குரலாய் இருக்கும்....
வாழும் வாழ்வு அவளுக்காக இருக்கும்...
முடிவில் மரணம் உனக்கும் உன் காதலுக்கும் மட்டுமே இருக்கும்....

எனக்காக ஒரு வாழ்க்கை...
பத்து மாதம் என்றாலும் பத்திரமாய்பார்த்தாய்...
உனக்கென நான் என்ன செய்ய???
உயிரையும் தர முடியாது ...
அதனை உருவாக்கியவளேநீதானே...
உன்னை என்ன சொல்ல...கடவுள்என்று சொல்ல மறுக்கிறேன்...
தெய்வங்களில் உயிரை எடுக்கும்சக்தி உள்ளது ...
ஆனால் நீ உயிரை தரும் கடவுள்மட்டுமே....
உயிரை தர நான் தயார்...
உனக்கு வலி இல்லை என்றால்...

Monday, October 05, 2009


ITS JUST U ME
AND
OUR LOVE...

கண்ணீர்....

உன்னை அறியாமலே...
உன்னை காட்டிக்கொடுக்க...
இறைவன் உனக்குள் வைத்த பொறி ...