Friday, February 26, 2010

இறப்பு...


இந்த உலகத்தில் இருந்து நீ
விடை பெரும் தருணம் அல்ல
நீ விடுதலை அடையும் தருணம்..

அலைகளின் ஓய்விற்கு காத்திருந்தால்
முத்துகளின் முகங்கள் உனக்கு கிடைக்காது...
உன்னால் முடியவில்லை என்று நீ சொல்லும் ஒவ்வொன்றையும்
எவனோ உன்னைப்போல் ஒருவன்தான் செய்கின்றான்..
தோல்விகளும் துக்கங்களும் அனைவர்க்கும் உண்டு
தாங்குவதும் தகர்தெறிவதும் உன்னுடைய வீரம்...
நீ சோர்வடையும் இடத்தையும் சிகரமாய் தேர்ந்தெடு...
நேற்றைய இழப்பினை இன்றில் ஈடு செய்...
இன்றினை உனதாக்கினால்....
நாளை உன் வெற்றி...

இரு விழி நிறைந்து நீ இருந்ததால்தான்
என்னவோ

என்னை
விட்டு நீ பிரிந்த பின்
கண்ணீர்
உள்நிற்க மறுக்கிறது....

முதலும் முடிவும்







எனக்கு அனைத்துமாய் நீ இருந்தாய்
ஆனால் இப்பொழுது நானோ
எதுவுமில்லாமல் இருக்கிறேன்
என்னுடன் நீ இல்லாததால்...